லடாக் எல்லை பதற்றம் -அமெரிக்க செனட்டர்கள் இந்தியாவுக்கு ஆதரவு

0 8605
இந்தியாவுக்கு எதிரான அத்துமீறலுக்கு இரண்டாவது தடவையாக சீனாவுக்கு கண்டிப்பு

லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தின் பின்னணியில்,  இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அமெரிக்க செனட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டனில் உள்ள இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்துவிடம் பேசிய  குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் மார்கோ ரூபியோ ((Marco Rubio)), சீனாவின் சட்டவிரோதமான தேவையற்ற ராணுவ ஆதிக்கத்தை  இந்திய மக்கள் உறுதியுடன் எதிர்த்து தோற்கடித்து விட்டதாக தெரிவித்தார். 

இந்தியாவை சீனாவால் அச்சுறுத்த முடியாது என்று டுவிட்டரிலும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க செனட்டின் குடியரசுக்கட்சி கட்சி தலைவரான மிட்ச் மெக்கொன்னல் ((Mitch McConnell)) இந்தியாவுக்கு எதிரான அத்துமீறலுக்கு இரண்டாவது தடவையாக சீனாவை கண்டித்துள்ளார். மற்றோர் குடியரசு கட்சி செனட்டரான  டாம் காட்டன் ((Tom Cotton)), சீனா இந்தியாவுடன் இமாலயத்திலும், ஜப்பான் கடற்பகுதியில் நீர்மூழ்கிகள் வாயிலாகவும் போருக்கு முனைவதாக  குற்றம் சாட்டி உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments