சாலை வரி வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

0 2105

வரும்  6 ஆம் தேதிவரை சாலை வரி தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து வாகனங்களும் முழு ஊரடங்கு உத்தரவால் இயங்கவில்லை என்பதால் சாலை வரியை செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்  என  லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மீது நடந்த விசாரணையில்  தமிழக அரசின் சார்பாக  ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன்,  பதில் அளிக்க இரண்டு வார கால அவகாசம்  வேண்டும் என்று கோரினார், இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி மகாதேவன் வரும் 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments