முகக்கவசம் அணிய அறிவுறுத்திய ஒப்பந்த ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்
ஆந்திராவில் சுற்றுலாத்துறை மண்டல அலுவலகத்தில் முகக்கவசம் அணிய அறிவுறுத்திய ஒப்பந்த ஊழியரை மாற்றுத்திறனாளி என்று கூட பார்க்கமால், அலுவலக மேலாளர் இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லூரில் உள்ள சுற்றுலாத்துறை ஓட்டல் மற்றும் மண்டல அலுவலகத்தில், ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் மாற்றுத்திறனாளி உஷாராணி, அலுவலக மேலாளர் பாஸ்கர் ராவிடம் முகக்கவசம் அணிந்து பேசுமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் ராவ், மாற்றுதிறனாளி என்று கூட பார்க்காமல் உஷா ராணியை தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி, இரும்பு ராடால் பலமாக தாக்கினார்.
சக ஊழியர்கள் தடுக்க முயன்ற போதும் மேலாளர் தொடர்ந்து தாக்கினார். இதுகுறித்து உஷாராணி அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து மேலாளர் பாஸ்கர் ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments