சீனாவில் ஸ்வைன் ஃப்ளுவில் இருந்து புதிய G4 வைரஸ் கண்டுபிடிப்பு... பல நாடுகளுக்கு பரவும் என எச்சரிக்கை!

0 92189

மற்றோரு பேன்டமிக் சூழலை ஏற்படுத்த சாத்தியமான புதிய 'ஸ்வைன் ஃப்ளு' வைரஸை  சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2011 - ம் ஆண்டிலிருந்து 2018 - ம் ஆண்டு வரை பன்றிகளில் இருந்து பரவிய இன்புளூயன்சா வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது  G4 மரபணுவைச் சேர்ந்த,  2009 ம் ஆண்டு பரவியல  H1N1 வைரஸ்' போன்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   ஸ்வைன் ஃப்ளு வைரஸே மரபியல் ரீதியில் மாற்றம் பெற்று வலிமையான G4 வைரசாக உருமாற்றம் பெற்றிருக்கிறது.

மரபியல் ரீதியில் மறுசீரமைப்பு பெற்ற EA H1N1 வைரஸானது pdm/09 and TR-உள் மரபணுவைப் பெற்றிருக்கின்றன. பொதுவாக இவை G4 மரபணு வகை என்று அழைக்கப்படுகின்றன. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த வைரஸ், 2016 - ம் ஆண்டு ஸ்வைன் ஃப்ளு  ஏற்படுத்திய தாக்கத்தை விடவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் . உலகளவில் பல நாடுகளுக்கு  பரவும் தன்மை வாய்ந்து என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

image

சீன அரசின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், 'G4 வைரஸ்கள் எளிதில் மனித மூலக்கூறுகளுடன் பிணைந்துகொள்ளும் தன்மை வாய்ந்தவை. இது சுவாச மண்டலத்தின் வெளிப்புற அடுக்குகளில் எளிதில் பலமடங்கு பெருகும் தன்மை வாய்ந்தது.  காற்று மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவும்; இந்த வைரஸ் தாக்கினால் மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தும்மல் ஆகியவை ஏற்படும். உடல் எடையில் 7.3 % முதல் 9.8% இழக்க நேரிடும்' என்று எச்சரித்திருக்கிறது.

"எளிதில் பரவும் தன்மை வாய்ந்த  இன்புளூயன்சா வைரஸ் தலைமுறைகளுக்குப் பன்றிகள்தான் பரவும் காரணியாக (Host) இருக்கின்றன. அதனால் பன்றிகளின் உடலில் உள்ள வைரஸைக் கண்காணிப்பதன் மூலம் அடுத்த நோய்ப் பரவல் ஏற்படுவதற்கு முன்பு உலகை எச்சரிக்கை முடியும்" என்கிறார்கள் புதிய வைரஸைக் கண்டுபுடித்த விஞ்ஞானிகள்.

image

பன்றி வளர்ப்பவர்களில் 10.4 % பேரரிடத்தில் புதிய  G4 வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே மனித உடலில் உற்பத்தி ஆகியிருக்கும் ஸ்வைன் ஃப்ளு வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி புதிதாக அப்டேட் ஆகியிருக்கும் இந்த  G4  வைரஸ்களுக்கு எதிராக வேலை செய்யாது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 

ஏற்கெனவே கொரோனா வைரஸிடம் சிக்கி உலகம் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஸ்வைன் ஃப்ளு வேறு மரபியல் மாற்றம் பெற்று உலகை அச்சுறுத்தத் தயாராவது விஞ்ஞானிகளிடத்தில் அதிக கவலையை  ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் எப்படி எதிர்கொள்ள போகிறதோ? 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments