சீன இறக்குமதிக்கு உரிமம் பெறும் முறையை கொண்டு வர முடிவு ?
சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, ஏ.சி., டி.வி மற்றும் அவற்றின் உதிரிபாகங்கள் உள்ளிட்ட 12 வகையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, உரிமம் பெறும் முறையை அமல்படுத்தலாமா என மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த இறக்குமதி உரிமம் முறை சில மாதங்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டாலும், இப்போது, அகர்பத்தி,டயர்கள், பாமாயில் ஆகியவற்றின் இறக்குமதிக்கு மட்டுமே இப்போது உரிமம் பெறுவது நடைமுறையில் உள்ளது.
நாட்டில் விற்கப்படும் சுமார் 70 லட்சம் ஏசிக்களில் மூன்றில் ஒரு பங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டில் தயாரிக்கப்படும் எஞ்சிய ஏசி களுக்கான உதிரி பாகங்களில் 90 சதவிகிதம் வரை சீனா மற்றும் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நடத்தப்படும் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் சுங்கவரியை உயர்த்துதல், உரிமம் முறை ஆகியன மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments