5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து முக்கிய ஆலோசனை
சீன மொபைல்களுக்கு தடை விதிக்கும் திட்டத்தின் முன்னோடியாக, நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து உயர்மட்ட அளவிலான ஆலோசனையை மத்திய அரசு துவக்கி உள்ளது.
சீனாவின் 59 மொபைல் செயலிகளை தடைசெய்வது குறித்து டெல்லியில் நடந்த முக்கிய அமைச்சர்களின் கூட்டத்தில் இது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் போது 5 ஜி வசதி உள்ள ஹுவேய் போன்ற சீன தயாரிப்பு களை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு கருதுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்கா ஹூவேய் மொபைலுக்கு அடுத்த ஆண்டு வரை தடை விதித்துள்ளது. இதே தடையை பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளும் விதிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா கூறி வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக 5ஜி அலைவரிசை தொழில்நுட்பத்திற்கான ஏலம் ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments