போலீசாரின் நிவாரண நிதியை திருப்பி தர முதலமைச்சர் உத்தரவு
முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட காவல்துறையினரின் ஒரு நாள் ஊதியத்தை திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு திரட்டப்படும் நிதிக்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் விருப்பத்திற்கு இணங்க அவர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டது.
அந்த வகையில் காவல்துறை சார்பில் 8 கோடி 41 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஓய்வின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதை கருத்தில் கொண்டு நிவாரண நிதிக்கு வழங்கிய ஊதியத்தை திருப்பி தர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி திருப்பி கொடுக்கப்படும் பணம், காவல்துறையினருக்கு சரியாக சென்று சேர்வதை உறுதி செய்ய டிஜிபிக்களுக்கு உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
போலீசாரின் நிவாரண நிதியை திருப்பி தர முதலமைச்சர் உத்தரவு | #CMEdappadiPalaniswami | #Police https://t.co/r1yn2yUwep
— Polimer News (@polimernews) June 30, 2020
Comments