சுஷாந்தின் ட்விட்டர் அக்கவுண்ட் குறித்த தகவல்களை கோரிய போலீசார்

0 2368

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக, மும்பை போலீசார் அவரது ட்விட்டர் அக்கவுண்ட் குறித்த தகவல்களை கோரியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படும் சுஷாந்த் சிங், கடந்த 14ம் தேதி மும்பை பாந்த்ராவிலுள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் போலீசார், இதுவரை 27 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் அவரது ட்விட்டர் அக்கவுண்ட் குறித்த தகவல்கள் ட்விட்டர் இந்தியா நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங்கின் ட்விட்டர் பக்கத்தை 22 லட்சம் பேர் பின் தொடர்ந்த நிலையில், 757 பேரை அவர் பின் தொடர்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments