கால்வன் பள்ளத்தாக்கில் டி90 டாங்குகளை நிறுத்தியுள்ள இந்தியா

0 5785

சீனாவுடன் மோதல் நேரிட்டால் பதிலடி கொடுக்க கால்வன் பள்ளத்தாக்கில் டி-90 ரக டாங்கிகளை (T-90 tanks) இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கால்வன் பள்ளத்தாக்கில் சீனா, இந்தியா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அதைத் தணிக்க இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இருநாட்டு மூத்த ராணுவ கமாண்டர்கள் இன்று சுசுல் பகுதியில் சந்தித்து மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளனர். இதுபோல் பதற்றத்தை தணிப்பதற்கான முயற்சியில் இந்தியா ஈடுபட்ட போதிலும் மறுபக்கம் சீனாவுடன் மோதல் நேரிட்டால் அதை எதிர்கொள்ளவும் இந்தியா தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

கால்வன் நதி படுகையில் சீனா படைபலத்தை அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு, 2 பீரங்கி படைப்பிரிவுகளுடன் ஏற்கெனவே நிறுத்தப்பட்ட 155 எம்எம் ஹெளவிட்சர் ரக பீரங்கிகளுடன் (howitzers) ஆறு டி 90 பீஸ்மா டாங்குகளையும் ((T-90 Bishma tanks)), டாங்கிகளை சுட்டுவீழ்த்தும் அமைப்புகளையும் (shoulder fired anti-tank missile systems) இந்தியா நிறுவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments