நாட்டின் 2ஆவது பெரிய தொலைபேசி நிறுவனமானது பார்தி ஏர்டெல்

0 14203

நாட்டின் 2ஆவது  பெரிய தொலைபேசி நிறுவனமாக பார்தி ஏர்டெல் உருவெடுத்துள்ளது. 

2018க்கு முன்புவரை  முதலிடத்திலிருந்த பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் நிறுவனத்தால் ஜியோ ஆரம்பிக்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் இழப்பு, வோடாபோன்- ஐடியா நிறுவனங்கள் இணைப்பு ஆகிய காரணத்துக்காக அந்த இடத்தை இழந்தது. இதையடுத்து சந்தாதாரர்கள் எண்ணிக்கை அடிப்படையில் வோடாபோன் ஐடியா முதலிடம் பிடித்தது. ஏர்டெல் 2ம் இடத்திலிருந்தது. இருப்பினும் ஜியோ அசுரவேகத்தில் வளர்ந்து முதலிடத்துக்கு வந்ததால், வோடாபோன் ஐடியா 2ம் இடத்திலும் பார்தி ஏர்டெல் 3ம் இடத்திலும் இருந்தன. 

இந்நிலையில்  வோடாபோன் ஐடியா நிறுவனம் 19 மாதங்களில் படிப்படியாக சுமார் 11 கோடியே 60 லட்சம் (116 million) சந்தாதாரர்களை இழந்துள்ளது. இது பிஎஸ்என்எல் நிறுவன மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆகும்.

இதேகாலகட்டத்தில் பார்தி ஏர்டெல் மீண்டும் அதிக சந்தாதாரர்களை இணைத்தது. இதனால்  வோடாபோன் ஐடியா 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments