இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்து.. மனிதர்களுக்கு பரிசோதிக்க அனுமதி..!
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை (COVAXIN) மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
கோவாக்சினை ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
ஆய்வில் இந்த மருந்தின் பாதுகாப்புத் தன்மையும், நோய் எதிர்ப்புத் திறனும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து சோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறியுள்ள அந்த நிறுவனம், மனிதர்கள் மீதான பரிசோதனையை ஜூலை மாதத்தில் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
COVAXIN™, India's 1st indigenous Covid-19 vaccine, developed by Bharat Biotech successfully enters human trials.
— BharatBiotech (@BharatBiotech) June 29, 2020
@ICMRDELHI @DBTIndia @icmr_niv #BharatBiotech #COVAXIN #covid19 #Collaboration #Indiafightscorona #makeinindia #ICMR #coronavirusvaccine pic.twitter.com/MSehntuE8d
Comments