டிக்டாக் – சேர் இட்.. 59 சீன செயலிகளுக்கு ஆப்பு..! மத்திய அரசு தடைவிதித்தது

0 12776

சீனாவின் டிக்டாக், ஷேர் இட் , யுசி புரவுசர் உள்ளிட்ட 59  செயலிகளை தடை செய்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதற்கான மாற்று பயன்பாட்டு இந்திய செயலிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறலை தடுத்த இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்துவந்தாலும், சீனப் பொருட்களுடன் இந்தியாவிற்கு கப்பலில் வரும் கண்டெய்னர்களை விடுவிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீனப் பொருட்களையும், அதனை தொடர்ந்து சீனாவின் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட செயலிகளையும் இந்திய மக்களும் புறக்கணிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில், சமூக கலாசார சீரழிவுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் தனிப்பட்ட விவரங்களை திருடிய குற்றச்சாட்டுக்குள்ளான டிக்டாக், ஷேர் இட், ஹெலோ, லைக், விகோ, யுசி ப்ரவுசர், பைடு மேப், செல்ஃபி சிட்டி, வி மீட், பிகோ லைவ், வைரஸ் கிளீனர், கேம்ஸ்கேனர்,கிளீன் மாஸ்டர், விமேட் உள்ளிட்ட 59 சீனா செயலிகளை மத்திய அரசு அதிரடியாக தடை செய்தது.

குறிப்பாக டிக்டாக்கிற்கு விதிக்கப்பட்ட இந்த தடை நாடு முழுவதும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த செயலிகளை பயன்படுத்தி பொழுதைக் கழித்து வந்த பலர் சோகமடைந்துள்ளனர். இத்தகைய செயலிகளை தவிர்க்க இயலாமல் பயன்படுத்துவோராக இருந்தால் மேற்கண்ட சீன செயலிகளுக்கு இணையாக இந்திய மற்றும் வேறு நாடுகளின் செயலிகள் கூகுல் பிளே ஸ்டோரில் உள்ளன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதன்படி சீனாவின் டிக்டாக், விகோ, லைக், ஹலோ போன்றவற்றிற்கு பதிலாக இந்தியாவின் ரொபொசொ, இன் ஜாய், டப்மாஷ், மெட்லிப்ஸ், சின்காரி போன்ற செயலிகள் உள்ளன.

ஷேர் இட் செயலிக்கு பதிலாக ஜியோ சேர், ஷேர் பைல்ஸ் சென்ட் எனிவேர் , சென்ட் எனிவேர் போன்ற செயலிகள் உள்ளன.

விவா வீடியோ எடிட்டர் செயலிக்கு பதிலாக பவர் டைரக்டர் வீடியோ எடிட்டர்,குயிக் ஃபிரீ வீடியோ எடிட்டர் போன்றவை பயன்பாட்டில் உள்ளன.

யுசி பிரவுசருக்கு பதிலாக எபிக் பிரவுசர், ஜியோ பிரவுசர் போன்றவையும் கேம் ஸ்கேனருக்கு பதில் டாக் ஸ்கேனர், டாக்மெண்ட் ஸ்கேனர், அடோப் ஸ்கேன் போன்றவை பயன்பாட்டில் உள்ளன.

பியூட்டி பிளஸ், யுகேம் மேக் அப் செயலிக்கு பதிலாக பி612 பியூட்டி அண்ட் பில்டர் கேமரா, லைட் ரூம், பிக்ஸ் ஆர்ட் போன்ற செயலிகள் உள்ளது.

தடை செய்யப்பட்டுள்ள சீனாவின் 59 செயலிகளுக்கு மாற்றாக வேறு செயலிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments