தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு
தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவு
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போதுள்ள முழு ஊரடங்கு ஜூலை 5 வரை தொடரும்
ஜூலை 5 ஆம் தேதி முதல் 4 ஞாயிற்றுகிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்
மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு அமல்
மாவட்டங்களுக்குள் தனியார் மற்றும் அரசுப் போக்குவரத்து ஜூலை 1 - ஜூலை 15 வரை தற்காலிகமாக நிறுத்தம்
கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான கோயில், மசூதி, தேவாலயத்தில் பொதுமக்கள் தரிசனம் அனுமதி
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி தரிசனம் அனுமதிக்கப்படாது
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த வித தளர்வும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜூலை 6 முதல் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதி
முழு ஊரடங்கு அமலில் உள்ள காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்
ஜூலை 6 முதல் வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்
ஜூலை 6 முதல் உணவகங்களில் குளிர்சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது
Comments