இந்தியா-சீனா இடையே 3 ஆம் முறையாக ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை
இந்தியா-சீனா இடையே லெப்டினன்ட் ஜெனரல் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 3 ஆவது பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.
கடந்த 15 ஆம் தேதி நடந்த கால்வான் மோதலுக்குப் பிறகு கடந்த 22 ஆம் தேதி இதைப் போன்ற பேச்சுவார்த்தை லடாக் எல்லையில் சீனப் பகுதியில் வைத்து நடைபெற்றது.
அதில் பதற்றம் நிலவும் இடங்களில் இருந்து இருதரப்பு படைகளையும் திரும்ப பெறுவது குறித்து இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. அதன் அடிப்படையில் கால்வானில் இருந்து தனது ஓரளவு துருப்புக்களையும், ராணுவ வாகனங்களையும் சீனா திரும்ப பெற்றதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை கட்டுப்பாட்டு எல்லையில் உள்ள இந்திய பகுதியான சூஷுலில் வைத்து நடைபெறும் என கூறப்படுகிறது.
Comments