மராட்டிய மாநிலத்தில் ஜூலை 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக, மும்பை பெருநகர பகுதிகளில் அத்தியாவசியம் இல்லாத சேவைகள் கட்டுப்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. பொருட்களை வாங்கவும், உடற்பயிற்சி செய்யவும் வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிவதுடன் சமூக இடைவெளி மற்றும் தனிநபர் சுகாதாரத்தை பேண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் அலுவலகம் செல்வோர் மற்றும் அவசரகால தேவைக்கு மட்டும் மக்கள் நடமாட்டம் அனுமதிக்கப்படும். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தாலும், அதன் பரவல் அதிகரிப்பதால் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்காத வகையில் மக்கள் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேற்று கூறிய நிலையில், இன்று ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments