கராச்சி பாக். ஸ்டாக் எக்சேஞ்ச்-ல் தீவிரவாத தாக்குதல் - 9 பேர் கொலை

0 1731

கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டித்தில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தீவிரவாதிகள் 4 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

கட்டிடத்தின் நுழைவாயிலில் குண்டுகளை எறிந்தவாறு பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் துணை ஆய்வாளர் உள்பட 5 காவலர்கள் கொல்லப்பட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்து குவிந்த போலீசார் திருப்பிச் சுட்டதில் தீவிரவாதிகள் 4 பேரும் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை பொறுப்பேற்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments