டெல்லியில் பிளாஸ்மா வங்கிகள் திறக்கப்படும்-கெஜ்ரிவால்
கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில், டெல்லியில் பிளாஸ்மா வங்கி துவக்கப்படும் என முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இன்னும் 2 தினங்களில் அது இயங்கத் துவங்கும் என அறிவித்துள்ள அவர், கொரொனாவில் இருந்து குணமானவர்கள் இந்த வங்கிக்கு தங்களது ரத்த பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குமாறும் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லியில் ராஜீவ் காந்தி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மற்றும் லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் அரசு மருத்துவமனைகளில், பிளாஸ்மா தெரிபி சிகிச்சை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதனிடையே தெலங்கானா உள்துறை அமைச்சர் முகம்மது மஹ்மூத் அலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Delhi govt will start a plasma bank https://t.co/wwbnd3ypGs
— Arvind Kejriwal (@ArvindKejriwal) June 29, 2020
Comments