சமூகவலைதளங்களில் விளம்பரங்கள் வெளியிடுவதை நிறுத்திய ஸ்டார்பக்ஸ்

0 2127

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விளம்பரங்கள் வெளியிடுவதை நிறுத்தியுள்ளது.

கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு மரணத்துக்கு நீதி கேட்டு போராடுவோரை குண்டர்கள் என்றும், சூரையாடுதல் தொடங்கினால், துப்பாக்கிச் சூடும் தொடங்கும் என்பன போன்ற அதிபர் ட்ரம்பின் கருத்துகளை தனது தளத்தில் அனுமதிப்பதால், பேஸ்புக் நிறுவனம் பலரது அதிருப்திக்கு ஆளாகியுள்ளது.

வெறுப்பு கருத்துகளை அனுமதிப்பதை நிறுத்தக் கோரி #StopHateForProfit என்னும் ஹேஷ்டேக்கும் பகிரப்படுகிறது. இதனால் பல நிறுவனங்களும் பேஸ்புக்கில் விளம்பரங்கள் வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

இந்நிலையில் பிரபல துரித உணவு நிறுவனமான ஸ்டார் பக்சும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளியிடுவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதே சமயம் இந்த அறிவிப்பு கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூடியூபுக்கு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments