புதுச்சேரி முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை- பரிசோதனையில் உறுதி
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
முதலமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சட்டப் பேரவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, 2 நாட்களுக்கு முதல்வர் அலுவலகம் மூடப்பட்டது.
பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தனிமைப்படுத்திக்கொள்ள முதல்வர் நாராயணசாமியை சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. இ
ந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி உட்பட அவரது வீடு, அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், காவலர்கள் என 74 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதலமைச்சர் உட்பட அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை- பரிசோதனையில் உறுதி #PuducherryCM | #Narayanasamy https://t.co/4EHXPZr3FJ
— Polimer News (@polimernews) June 29, 2020
Comments