தந்தை-மகன் சிறை மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்களிடம் சுமார் 16 மணி நேரம் விசாரணை

0 2979

தந்தை- மகன் சிறை மரணம் தொடர்பாக, சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்களிடம் சுமார் 16 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்ததுடன், கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு, சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில், கோவில்பட்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேற்று மதியம் 12 மணிக்கு விசாரணையை தொடங்கினார்.

இந்த விசாரணை அதிகாலை 4 மணி வரை நீடித்தது. காவல்நிலையத்தில் உள்ள பொது நாட்குறிப்பு மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த நீதிபதி காவலர்களிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments