ராஜஸ்தானில் கிராமப்புறங்களில் ஜூலை 1 முதல் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு
ராஜஸ்தானில் ஜூலை 1ம் தேதி முதல் கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட், கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் நாளொன்றுக்கு 50க்கும் குறைவான மக்களே அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார். அப்போதும் மக்கள் தனிமனித இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்தே வரவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் மாநிலத்திற்கு வெளியில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதியை நீக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்த அவர், அவ்வாறு வெளியில் இருந்து வருபவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments