ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 86சதவீதம் அதிகரிப்பு
வடமாநிலங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிவோரின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டதால், ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில், 116 மாவட்டங்களுக்கு தலா 25 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பின்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு இதே சமயத்தில், 48 லட்சம் வேலை பார்த்த இந்த மாவட்டங்களில், தற்போது அந்த எண்ணிக்கை 90 லட்சமாக அதிகரித்துள்ளது.
Comments