காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 1136

காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குல்சோகர் என்ற இடத்தில் சில தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று அதிகாலை குறிப்பிட்ட பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments