மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் போன்ற ரயில்வே AC கோச்சுகளில் வசதி
ஏ.சி. கோச்சுகளில் இப்போது இருக்கும் குளிர்சாதன வசதியை, மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகளில் உள்ளது போல ரயில்வே மாற்றி உள்ளது.
ஏ.சி கோச்சுகளின் மேற்கூரையின் உள்பகுதியில் இருக்கும் ஏ.சி காற்றுத் துளைகள் வழியாக ஒரு மணி நேரத்திற்கு 6 முதல் 8 தடவைகள் காற்று சுழற்சி நடத்தப்பட்டு வந்தது. அது இப்போது 16 முதல் 18 தடவைகளாக அதிகரிக்கப்பட்டதுடன், புதிய காற்று உள்ளே வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ஏசி காற்று குழாய்கள் வழியாக கொரோனா பரவும் என சீன ஆய்வாளர்கள் மட்டுமே கூறியுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக, தற்போது இயக்கப்படும் 15 ஜோடி ராஜதானி ரயில்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. .கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் ஏ.சி ரயில்களில் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரியாக வைக்கப்படுவதுடன், பயணிகளுக்கு போர்வை வழங்கும் முறையும் கைவிடப்பட உள்ளது.
மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் போன்ற ரயில்வே AC கோச்சுகளில் வசதி #FreshAir #RailwayDepartment #OperationTheatre https://t.co/lYMygLbwjH
— Polimer News (@polimernews) June 28, 2020
Comments