தமிழ்நாட்டில் இன்று 3940 பேருக்கு கொரோனா உறுதி

0 12080

தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவில், அதிகபட்சமாக ஒரே நாளில் சுமார் 4 ஆயிரம் பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில், 4ஆவது நாளாக,கொரோனா பாதிப்பு, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில், 3 ஆயிரத்து 940 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்களில் 179 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகம் திரும்பியவர்கள். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆயிரத் தை தாண்டி விட்டது.

ஒரே நாளில் அதிகபட்சமாக 54 பேர், தமிழகத்தில் பலி ஆனார்கள். இவர்களில் திருவள்ளூரில் 17 வயது இளைஞர் ஒருவரும், செங்கல் பட்டில் 29 வயது மற்றொரு இளைஞர் மற்றும் ஒரு பெண் உள்பட மொத்தம்10 பேர், தனியார் மருத் துவமனைகளில் இறந்தனர். விழுப்புரத்தில், ஒன்றரை வயது குழந்தை மற்றும் 13 பெண்கள் உள்பட மொத்தம் 44 பேர் அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிர்ப் பலி, ஆயிரத்து 79 ஆக உயர்ந் துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 443 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டதால் தமிழகத்தில் குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 45 ஆயிரத் தை தாண்டியது. ஒரே நாளில் சுமார் 33 ஆயிரம் பேருக்கு கொரோ னா பரி சோதனை நடத்தப்பட்டதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, மொத்தம் 11 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு இதுவரை, பரிசோதனை நடத்தி முடித்து உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கரூர், கிருஷ்ணகிரி ஆகிய இரு மாவட்டங்களைத் தவிர, எஞ்சிய அனைத்து மாவட்டங் களிலும் ஞாயிற்றுக்கிழமை , கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரத்தில் ஒன்றரை வயது குழந்தையும், திருவள்ளூரில் 17 வயது இளைஞர் ஒருவரும், கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.. சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், ஆயிரத்து 992 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது.

செங்கல்பட்டில் புதிதாக 183 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. திருவள்ளூரில் புதிதாக 99 பேரும், காஞ்சி புரத்தில் 92 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் ஒரே நாளில் 284 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது.

கள்ளக்குறிச்சியில் 169, திருவண்ணாமலையில் 142, சேலத்தில் 109, ராமநாதபுரத்தில் 93, திருவாரூரில் 87, வேலூரில் 85, தேனியில் 62, விருதுநகரில் 61, விழுப்புரத்தில் 47 , திருச்சியில் 43, கடலூரில் 39, புதுக்கோட்டையில் 36 மற்றும் கோவையில் 32 பேரும் புதிதாக கொரோனா வால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு உயிரிழந்த ஆயிரத்து 79 பேரில், 809 பேர், சென்னையை ச் சேர்ந்தவர்கள் என்றும், சென்னை யில் மட்டும் ஓரே நாளில் 33 பேர், கொரோனாவுக்கு பலி ஆகி இருப்பதாகவும், தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments