சென்னையில் இன்று கொரோனாவுக்கு 25 பேர் பலி
சென்னையில் இந்தியன் வங்கி கிளை உதவி பொது மேலாளர் உள்ளிட்ட 25 பேர் இன்று கொரோனாவுக்கு பலியானார்கள்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி, பெரம்பூரை, பெசன்ட் நகரை சேர்ந்த முதியவர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் திருவல்லிக்கேணி, ஜார்ஜ்டவுன், நொளம்பூரைச் சேர்ந்த முதியவர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் சவுகார்பேட்டை, கொடுங்கையூர், பெரியபாளையம், வியாசர்பாடி, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த5 பேர் உயிரிழந்தனர்.கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மயிலாப்பூரை சேர்ந்த இந்தியன் வங்கி உதவி பொதுமேலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தியாகராயநகர் தனியார் மருத்துவமனையில் 29 வயதே ஆன ஒருவர் உயிரிழந்தார்.
சென்னையில் இன்று கொரோனாவுக்கு 25 பேர் பலி #Chennai #coronavirus https://t.co/TtmTKqNWIp
— Polimer News (@polimernews) June 28, 2020
Comments