மணிப்பூர், மேகாலய மாநிலங்களில் நிலஅதிர்வு

0 934

மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங்களிலும், அந்தமான் நிகோபார் தீவுகளிலும் இன்று  நில அதிர்வுகள் ஏற்பட்டது.

மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் பகுதி அருகே ((Ukhrul area )) காலை 11.24 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளியாக நில அதிர்வு நேரிட்டுள்ளது. மேகாலயம் மாநிலம் டூரா அருகே மதியம் 12.24 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.9ஆக நில அதிர்வு உணரப்பட்டது.

இதேபோல் அந்தமான் நிகோபார் தீவுகளின் திக்லிபூர் ((Diglipur)) பகுதியில் காலை 8.30 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.1ஆக நில அதிர்வு நேரிட்டுள்ளது. இந்த நில அதிர்வுகளால் யாரேனும் காயமடைந்தனரா அல்லது சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments