எல்லையில் சீனத் தற்காப்பு வீரர்கள்
கால்வன் பள்ளத்தாக்கு மோதலுக்கு முன், தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற வீரர்களை எல்லைப் பகுதிக்குச் சீனா அனுப்பிவைத்ததாக அந்நாட்டின் நாளேடு தெரிவித்துள்ளது.
சீனா நேசனல் டிபென்ஸ் நியூஸ் என்னும் நாளிதழை அந்நாட்டு ராணுவம் வெளியிட்டு வருகிறது. அதில் சீனாவின் மலையேற்ற வீரர்களும், தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற வீரர்களும் திபெத் தலைநகர் லாசாவில் ஜூன் 15ஆம் தேதி இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் சீன அரசு தொலைக்காட்சியான சிசிடிவியும் நூற்றுக்கணக்கான புதிய வீரர்கள் லாசாவில் அணிவகுத்து நிற்கும் காட்சியை வெளியிட்டுள்ளது. இந்திய எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், திபெத்தில் நிலைத்தன்மை ஏற்படுத்தவும் புதிய வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அந்த நாளிதழில் குறிப்பிட்டுள்ளது.
Comments