தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட்

0 20922

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாக கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னர் சிறையிலடைக்கப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிஸ் ஆகியோர் சிறையிலேயே உயிரிழந்தனர். போலீசார் தாக்கியதே இருவரது உயிரிழப்புக்கும் காரணமாக கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரையும் பணியிடை நீக்கம் செய்து நெல்லை  சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிமன்யு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக வடசேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெர்னாட் சேவியர் சாத்தான்குளம் காவல்நிலையத்தின் புதிய ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். அதே போல் புதுகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாரி மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணி மாறன் ஆகியோர், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புதிய காவல் உதவி ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments