அறிகுறி உடைய நபர்களுக்கு மட்டுமே பரிசோதனை நடத்தமுடியும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
அறிகுறி உடைய நபர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்த முடியும் என்றும், சாலையில் செல்பவர்களுக்கு எல்லாம் கொரோனா பரிசோதனை செய்ய முடியாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில், கொரோனா பாதித்தவர்களுக்கு மனநல ரீதியான ஆலோசனை வழங்கும் மையத்தை அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதன் பிறகு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, அரசு மீது மக்களிடையே உள்ள நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்து வருவதாக குறிப்பிட்டார்.
அறிகுறி உடைய நபர்களுக்கு மட்டுமே பரிசோதனை நடத்தமுடியும் - அமைச்சர் செல்லூர் ராஜூ #Madurai #MinisterSellurRaju #Coronavirus #Covid19 #CoronaSymptoms https://t.co/8OtHj92AnS
— Polimer News (@polimernews) June 28, 2020
Comments