பாபா ராம்தேவ் உள்ளிட்ட 5 பேர் மீது ஜெய்ப்பூரில் FIR பதிவு
கொரோனா தொற்றை குணப்படுப்படுத்தும் என்று கூறி, ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதி இன்றி, ஆயுர்வேத மருந்தை விற்க முயன்றதாக பதஞ்சலி நிறுவனர் பாபா ராம் தேவ் உள்ளிட்ட 5 பேர் மீது ராஜஸ்தான் போலீசார் FIR பதிவு செய்துள்ளனர்.
கடந்த 23 ஆம் தேதி கொரோனில் என்ற பெயரில், கொரோனாவை முழுமையாக குணமாக்கும் மருந்து என கூறி 545 ரூபாய் விலையுள்ள ஆயுர்வேத கிட் ஒன்றை ராம்தேவ் ஹரித்வாரில் அறிமுகம் செய்தார்.
அதற்கு சில மணி நேரங்கள் கழித்து, அந்த மருந்து குறித்து பல கேள்விகளை எழுப்பி, அதை விளம்பரம் செய்ய ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், ஜெய்பூர் ஜோதி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது.
பாபா ராம்தேவ் உள்ளிட்ட 5 பேர் மீது ஜெய்ப்பூரில் FIR பதிவு #BabaRamdev #FIR #Jaipur #Rajasthan https://t.co/oi0iaxf2vV
— Polimer News (@polimernews) June 28, 2020
Comments