வனிதா விஜயகுமார் கணவர் பீட்டர் பால் மீது முதல் மனைவி போலீசில் புகார்

0 37950

நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். படத்தயாரிப்பாளரான பீட்டர் பாலும் வனிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணம் ஆகும். ஏற்கெனவே ஆகாஷ், ஆனந்த் ஜெயராஜன் ஆகியோரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்திருந்தார். இந்த திருமணங்கள் முறிந்ததையடுத்து பீட்டர் பாலை வனிதா திருமணம்செய்து கொண்டுள்ளார். பீட்டர் பாலும் ஏற்கெனவே திருமணமானவர்தான் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் பீட்டர் பால் தன்னை ஏமாற்றி விட்டதாக வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், '' நடிகை வனிதா நேற்று பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே என்னுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. குடும்ப பிரச்னை காரணமாக 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். முறையாக விவாகரத்து அளிக்காமல் பீட்டர் பால் வனிதாவை மணந்துகொண்டுள்ளார் '' என்று கூறியுள்ளார். 

இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments