இந்தியாவை தொட்டால்.... மோடியின் எச்சரிக்கை

0 7847

தமது மாதாந்திர வானொலி உரையான, மனதின் குரல் என பொருள்படும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார்.

அப்போது லடாக்கில் இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட இடங்கள் மீது கண் வைத்தவர்களுக்கு, பொருத்தமான பதிலடி அளிக்கப்பட்டதாக கூறினார். கால்வனில் வீர மரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களின் தியாகத்தை குறிப்பிட்ட அவர், இந்திய தாய் நாட்டின் மீது அன்னியர் கை வைக்க முடியாது என்பதை அவர்கள் நிரூபித்து காட்டி விட்டதாக தெரிவித்தார். 

அவர்களின்  வீரமே இந்தியாவின் பலமாக உள்ளதாக அவர் வர்ணித்த பிரதமர், நாடு வீரர்களுக்கும், வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலை வணங்குவதாக குறிப்பிட்டார். நல்ல அண்டை நாடாக நட்பை பராமரிக்கத்  தெரிந்த இந்தியாவுக்கு, மற்றவர்களுக்கு உரிய பதிலடியை கொடுக்கவும் தெரியும் என்றார் மோடி.

லடாக்கில் சீனா நடத்திய அக்கிரமத்தால் இந்தியர்கள் அனைவரும் ஆத்திரமடைந்துள்ளதாக கூறிய மோடி, சீனப் பொருட்களை புறக்கணிப்பது என்று தீர்மானித்ததன் மூலம் சீனாவுக்கு பொருளாதாரப் பின்னடைவையும் இந்திய மக்கள் ஏற்படுத்தி உள்ளனர் என  கூறினார்.

கொரோனா தொற்று பரவல் குறித்து தமது உரையில் குறிப்பிட்ட மோடி, தளர்வுகள் அளிக்கப்படும் காலகட்டத்தில் அதிக கவனத்துடன் இருக்குமாறு நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார். முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருப்பது, தங்களுக்கும், மற்றவர்களுக்கும் கேடு விளைவிப்பதாக மாறும் என மோடி எச்சரித்தார்.முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமது மனதின் குரல்  உரையில் அஞ்சலி செலுத்திய மோடி,சிக்கலான நேரத்தில் நாட்டிற்கு தலைமை தாங்கிய நரசிம்ம ராவ் ஒரு சிறந்த அரசியல் தலைவரும் அறிவாளியும் ஆவார் என பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments