கொரோனா தொற்றுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த இந்தியா கோரிக்கை
கொரோனா தொற்றுக்கான காரணம், அது பரவியது குறித்து விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. சீனாவின் ஊகான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி ஒரு கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவால்தான் இந்த வைரஸ் பரவியது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனா பரவல் குறித்து உலகளாவிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என மே மாதத்தில் உலக சுகாதார அமைப்பில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் வலியுறுத்தின.
அப்போது அந்த முயற்சிக்கு அழுத்தம் கொடுக்காமல் இந்தியா தவிர்த்துவிட்டது. லடாக்கில் சீனப்படையினர் அத்துமீறலால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பதற்றம் ஏற்ட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் குறித்த விசாரணையை முடுக்கிவிடக் கோரிச் சீனாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்க உலகளாவிய முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.
கொரோனா தொற்றுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த இந்தியா கோரிக்கை #COVID19India | #worldhealthorganization https://t.co/iMKJrzp4HN
— Polimer News (@polimernews) June 28, 2020
Comments