சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு நடிகர் சூர்யா கண்டனம்

0 4201

சாத்தான்குளம் சம்பவத்தில் அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் என்று நடிகர் சூர்யா வலியுறுத்தியுள்ளார். 

சூர்யா விடுத்துள்ள அறிக்கையில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவுக்கு நிகழ்ந்த போலீசாரின் லாக்கப் அத்துமீறல் காவல்துறையின் மாண்பைக் குறைக்கும் செயல் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர மரணத்தில் கடமை தவறிய அனைவரும் நீதிக்கு முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று சூர்யா வலியுறுத்தியுள்ளார்.

ஒட்டு மொத்த நாடும் இயங்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும் ஓய்வில்லாமல் மக்களின் நலனுக்காக காவல்துறையினர் உழைக்கின்றனர் என்றும் முன்வரிசையில் நிற்கிற காவல்துறையினருக்கு தலைவணங்குவதாகவும் சூர்யா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments