8 மாநிலங்களில் மட்டும் 85 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு

0 5078

மகராஷ்ட்ரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில்தான் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளில் 85 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் பெருமளவிலான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்தை எட்டியுள்ளது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். 87 சதவீத இறப்புகளும் இந்த எட்டு மாநிலங்களில் தான் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் நோய் இரட்டிப்பு ஆவது 19 நாட்களாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments