மூன்றாவது திருமணம் செய்துகொண்ட நடிகை வனிதா விஜயகுமார்

0 17894

திரைப்பட நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் அவரது வீட்டில் எளிமையான முறையில் நடைபெற்றது.

1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமான வனிதா, ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

தந்தை விஜயகுமாருடனான சண்டை காரணமாக இரு மகள்களுடன் தனியே வசித்து வந்த அவர், பீட்டர் பால் என்கிற விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநரை இன்று திருமணம் செய்துகொண்டார்.

சென்னை போரூரில் உள்ள வனிதாவின் இல்லத்தில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments