கொரோனா குணமாவோர் விகிதம் 58 சதவீதத்துக்கும் மேல் அதிகரிப்பு -ஹர்ஷ்வர்த்தன்

0 1236

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமாவோர் விகிதம் 58 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் (Harsh Vardhan) தெரிவித்துள்ளார்.

நாடு முழுமைக்கும் 5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதில் 3 லட்சம் பேர் வரை குணமாகி விட்டதாக கூறியுள்ள அவர், நாட்டில் கொரோனா பாதித்தோரில் 85 சதவீதம் பேர், 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும், இதேபோல் உயிரிழந்தோரில் 87 சதவீதம் பேரும் அதே 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு விகிதம் 3 சதவீதத்தை நெருங்கியிருப்பதாக கூறியுள்ள ஹர்ஷ்வர்த்தன், இது மிகவும் குறைவான விகிதம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கும் நாள்கள் 19ஆக குறைந்துள்ளதாகவும், இதேநாள்கள் ஊரடங்குக்கு முன்பு 3 நாள்களாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments