கோவாவில் கொரோனா சமூக பரவலாக தொடங்கியுள்ளது - முதலமைச்சர் பிரமோத் சாவந்த்
கோவாவில் கொரோனா சமூக பரவலாக தொடங்கி இருப்பதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
தொற்று யாரிடம் இருந்து யாருக்கு பரவியது என்பதை கண்டறிய முடியாத நிலையே சமூக பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த போதிலும், சமூக பரவலாக மாறவில்லை என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. கோவாவில் மேலும் 44 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 39ஆக அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த், கோவா முழுவதும் பரவலாக தொற்று காணப்படுவதாகவும், ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கோவாவில் கொரோனா சமூக பரவலாக மாறத் தொடங்கி இருப்பதாகவும், இதை தாம் ஒப்புக் கொள்வதாகவும் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
Comments