அசாமுக்குத் தண்ணீர் செல்வதை அடைத்ததாகக் கூறும் செய்திக்கு பூடான் மறுப்பு
அசாம் மாநிலப் பகுதிகளுக்குத் தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக வந்த செய்திகளை பூடான் அரசு மறுத்துள்ளது. பூடானில் இருந்து அசாமின் பக்சா, உடால்குரி மாவட்டப் பகுதிகளின் பாசனத்துக்குக் கால்வாய் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் தண்ணீரை பூடான் அரசு நிறுத்திவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன. இது குறித்து பூடான் வெளியுறவு அமைச்சகம் பேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளது. அதில், அசாமுக்குச் செல்லும் தண்ணீரை அடைத்துள்ளதாக வந்த செய்தி முற்றிலும் அடிப்படையற்றது எனக் குறிப்பிட்டுள்ளது.
நட்புடன் பழகிவரும் மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் அந்தச் செய்தி வெளியிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. பருவமழைக் காலங்களில் கால்வாய்களில் இயற்கையாகவே அடைப்பு ஏற்படுவதாகவும், அதைச் சரிசெய்து அசாம் விவசாயிகளுக்குத் தொடர்ந்து தண்ணீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Comments