அலுவலகங்களுக்கான கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

0 2249

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அலுவலகங்கள் எப்படி செயல்பட வேண்டும்? என நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், கர்ப்பிணி பெண்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அலுவலகங்களுக்கு வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வரும் பணியாளர்களை அனுமதிக்க கூடாது, வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கலாம். அலுவலகத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

பணியாளர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். ஆலோசனைக் கூட்டங்களை நேரடியாக நடத்தாமல் வீடியோ கான்பரசிங் மூலமாக நடத்த வேண்டும்.

ஓரிரு பணியாளர்களுக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டால் முழு அலுவலகத்தை மூட வேண்டிய அவசியமில்லை. கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தபின் பணியை தொடரலாம்.

அதிகளவில் கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டால் கிருமிநாசினி தெளித்த பின் 2 நாட்களுக்கு அலுவலகத்தை மூட வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments