அஸ்ட்ராஜெனேக்காவின் கொரோனா தடுப்பூசி ஆய்வு உலகளவில் முன்னணியில் உள்ளது - WHO

0 7274

பிரிட்டனை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனேக்காவின் கொரோனா தடுப்பூசி ஆய்வு, உலகளவில் முன்னணியிலும் மிகவும் மேம்பட்ட கட்டத்திலும் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 200 ஆராய்ச்சித் திட்டங்கள், கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உள்ளன. 15 ஆராய்ச்சித் திட்டங்கள் மனிதர்கள் மீதான பரிசோதனை என்ற கட்டத்தை எட்டியுள்ளன. இதில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனேக்காவும் இணைந்து செயல்படுத்தும் கொரோனா தடுப்பூசி திட்டம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி பரிசோதனை எந்த கட்டத்தில் உள்ளது மற்றும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அஸ்ட்ராஜெனேக்காவின் தடுப்பூசி ஆராய்ச்சிதான் முதலிடத்தில் உள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சியில் விரைந்து நல்ல முடிவு கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மருந்து தயாரிப்பு நிறுவனமான மாடெர்னா-வின் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி, இதற்கடுத்தபடி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments