சர்க்கரை நோய் இருப்பவர்கள் அறிகுறி தென்பட்டவுடனே கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுகோள்
சர்க்கரை நோய் உள்ளவர்கள், கொரோனா அறிகுறி தென்பட்டவுடனே உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டுமென சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புளியந்தோப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையின் 15 மண்டலங்களில் 8,426 கொரோனா பரிசோதனை மையங்கள் நடத்தப்பட்டு உள்ளதாகவும், அதில் 20 ஆயிரத்து 43 பேருக்கு தொற்று அறிகுறி கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சையில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பி உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்திலிருந்து 97 சிறப்பு ரயில்கள் மூலம் 1,37,755 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு உரிய பரிசோதனைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் அறிகுறி தென்பட்டவுடனே கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுகோள் #CoronaVirus | #CoronaTest | #TNCoronaUpdate https://t.co/y8ONEl8wqY
— Polimer News (@polimernews) June 27, 2020
Comments