அவசரச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல்.. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வந்த 1540 கூட்டுறவு வங்கிகள்..!
வங்கிகள் ஒழுங்குபடுத்தும் அவசரச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து நாடு முழுவதும் ஆயிரத்து 540 கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.
நாடு முழுவதும் ஆயிரத்து 482 நகரக் கூட்டுறவு வங்கிகள், பல மாநிலங்களில் கிளைகளைக் கொண்டு செயல்படும் 58 கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக வங்கிகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த அவசரச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்தவும், அவற்றில் பணத்தை வைப்புத் தொகையாகச் செலுத்தியுள்ள வாடிக்கையாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Comments