ஊரகப் பகுதிகளில் மருத்துவப் பணியாற்றும் 68 சதவீதம் பேர் மருத்துவப் பட்டங்களைப் பெறாதவர்கள் - ஆய்வில் தகவல்
ஊரகப் பகுதிகளில் மருத்துவப் பணியாற்றுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் முறையான மருத்துவப் பட்டங்களைப் பெற்றிருக்கவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த கொள்கை ஆராய்ச்சி மையம் 19 மாநிலங்களில் ஆயிரத்து 519 ஊர்களில் மருத்துவ சேவைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டின் 75 விழுக்காடு ஊர்களில் குறைந்தது ஒரு மருத்துவராவது உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் உள்ள மருத்துவர்களில் 86 விழுக்காட்டினர் தனியார் மருத்துவர்கள் என்றும், 68 விழுக்காட்டினர் முறையான மருத்துவப் பட்டங்களைப் பெற்றிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
முறையான தகுதிகளைத் தரத்துக்கான காரணியாகக் கொள்ள முடியாது என்றும், தமிழகத்திலும் கர்நாடகத்திலும் சான்றிதழ் பெறாமல் மருத்துவச் சேவையாற்றுவோர், பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் பயிற்சிபெற்ற மருத்துவர்களைவிட அனுபவம் பெற்றுள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
Comments