சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7ஆயிரத்தை கடந்தது

0 4670

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தையும், திருவிக நகர் மண்டலத்தில் 4 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு 49 ஆயிரத்து 690ஆக அதிகரித்துள்ளது.  ராயபுரத்தில் 7,211ஆகவும், தண்டையார்பேட்டையில் 5,989ஆகவும், தேனாம்பேட்டையில் 5,655ஆகவும், அண்ணாநகரில் 5,397ஆகவும், கோடம்பாக்கத்தில் 5,316ஆகவும் உயர்ந்துள்ளது. திருவிகநகரில் 4,132ஆகவும், அடையாறில் 3 ஆயிரத்து 57ஆகவும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வளசரவாக்கத்தில் 2,201ஆகவும், அம்பத்தூரில் 1982ஆகவும், திருவொற்றியூரில் 1912ஆகவும், மாதவரத்தில் 1524ஆகவும், ஆலந்தூரில் 1229ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் சோழிங்கநல்லூரில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 37ஆக அதிகரித்துள்ளது. 15 மண்டலங்களிலும் கொரோனாவிலிருந்து 28 ஆயிரத்து 823 பேர் குணமான நிலையில், இதுவரை 730 பேர் பலியாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments