6 மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வேலைவாய்ப்புத் திட்டம்

0 1551
ரயில்வேயின் 160 உட்கட்டமைப்புத் திட்டங்களில் 8828 பேருக்கு வேலைவாய்ப்பு

ரயில்வேயின் 160 உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய 6 மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள், ஊர்ப்புற மக்களின் நலனுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக 6 மாநிலங்களிலும் ரயில்வே துறையில் 160 உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்  செயல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டங்களில் பணியாற்ற எட்டாயிரத்து 828 பேர் தேவைப்படுவதாகவும், 125 நாட்களுக்கு வேலை என்கிற கணக்கில் மொத்தம் 8 லட்சத்து 67 ஆயிரத்து 675 மனித உழைப்பு நாட்கள் வேலை வழங்கப்படும் எனத் குறிப்பிட்டுள்ளார். ஆயிரத்து 888 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments