டெல்லியில் வீடு வீடாக சென்று பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று முதல் தொடக்கம்
டெல்லியில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இன்று முதல் வீடு வீடாக சென்று பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று தொடங்குகிறது.
இரண்டு நபர்களைக் கொண்ட சுமார் ஆயிரத்து நூறு குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி அரசின் கோவிட்-19 நோய்த்தடுப்பு நடவடிக்கையின் திட்டத்தின் கீழ் இம்மாதம் 30ம் தேதி வரை வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இதன் விவரங்கள் ஜூலை 10ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. மருத்துவத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இக்குழுக்களில் இடம்பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இக்குழுவினர் திரட்டும் விவரங்கள் யாவும் மத்திய அரசின் கொரோனா இணையவெளியுடனும் ஆரோக்கிய சேது போன்ற செயலிகளுடன் இணைக்கப்படும். . டெல்லியில் சுமார் 35 லட்சம் வீடுகள் இருப்பதாக கடந்த கணக்கெடுப்பின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வீடு வீடாக சென்று பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று முதல் தொடக்கம் #Delhi https://t.co/jly24vCBZh
— Polimer News (@polimernews) June 27, 2020
Comments