அசாமில் கனமழையால் 16 மாவட்டங்களில் வெள்ளம்
அசாமில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
அசாமில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருவதால், பிரம்மபுத்திராவிலும் அதன் துணை ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்து வருகிறது. இதனால் 16 மாவட்டங்களில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். நிவாரணப் பணிகளில் தீயணைப்பு வீரர்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். தேமாஜி, தின்சுகியா, மாஜுலி உள்ளிட்ட மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
திப்ருகரில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் வீடு வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
Comments