எல்லையில் உரிமை கோரிய பகுதியில் இருந்து 800 மீட்டர் தொலைவில் படைகள் - சீனா ஒப்புதல்
எல்லைக்கோட்டில் சீனா தனது உரிமை கொண்டாடிய பகுதியில் இருந்து 800 மீட்டர் தூரத்தில்தான் படைகளை நிறுத்தியிருப்பதாக இந்திய -சீன ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையின் போது சீன ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லடாக் எல்லைப் பகுதியில் சீனா படைகளைக் குவித்து வருகிறது. இதற்கான சாட்டிலைட் படங்கள் வெளியாகியுள்ளன. சீனா முகாம்களை அமைத்துள்ளதுடன் ராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்தியதையும் அந்த படங்கள் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இந்தியா சீனா ராணுவ உயர் அதிகாரிகளிடையே எல்லையில் பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் சீனா தனது படைகளை 800 மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் நூறு அல்லது 150 மீட்டர் வரைதான் சீனப்படைகள் முன்னகர்ந்து வந்ததாகவும் அந்நாட்டு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments